தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பா.ஜ.,- த.வெ.க., வுடன் பேச்சுவார்த்தை: ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தகவல்

 பா.ஜ.,- த.வெ.க., வுடன் பேச்சுவார்த்தை: ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தகவல்

 பா.ஜ.,- த.வெ.க., வுடன் பேச்சுவார்த்தை: ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தகவல்


ADDED : ஜன 26, 2026 04:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 26, 2026 04:26 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பா.ஜ., மற்றும் த.வெ.க., உடன் கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடந்து வருகிறது என, ல.ஜ.க., தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தெரிவித்தார்.

அவர், கூறியதாவது:

நான் 2014ல் பா.ஜ.,வில் இருந்து கொண்டே தொழில் செய்து வந்ததால் அரசியலில் என்னால் முழுமையாக ஈடுபடமுடியவில்லை. லட்சிய ஜனநாயககட்சி ஆரம்பித்ததில் இருந்து, எனது வளர்ச்சியை பார்த்து விட்டு என்னுடன் கூட்டணி வைக்க நிறைய பேர் வருகின்றனர். கட்சியை இப்போது தான் கட்டமைத்து வருகிறோம். யாருக்கும் பயந்து கூட்ணிக்கு செல்லவில்லை.

மொழி பிரச்னையில்காங்., - தி.மு.க., இரட்டை வேடம் போடுகிறது.கடந்த ஆட்சியில் நாராயணசாமி, கவர்னர் மாளிகைக்கு சென்று வந்தாரே தவிர, மக்களுக்காக எதுவும் செய்ய முடியவில்லை. காங்., கட்சியே ஊழல் தான்; அவர்களால் எப்படி ஊழலை ஒழிக்க முடியும்.இன, மொழி துரோகம் செய்த அவர்களுடன் கூட்டணி வைக்கமாட்டேன்.

எங்களது பலம் அனைவருக்கும் தெரியும். 15 தொகுதிகளில் போட்டியிடும் அளவிற்கு ஆட்கள் இருக்கின்றனர்.கூட்டணி குறித்து த.வெ.க., மற்றும் பா.ஜ., உடன் பேசி வருகிறோம். இன்னும் கூட்டணி உறுதியாகவில்லை.மக்களின் தேவைக்காக பா.ஜ.,வுடன் கூட்டணி பேசப்படுகிறது. த.வெ.க.,விடம்இருந்து சரியான பதிலுக்கு காத்திருக்கிறோம். மருந்து ஊழலில் அனைத்து கட்சியினரும் சம்பந்தபட்டு இருக்கின்றன.கூட்டணி அமைந்தவுடன் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தெரிவிக்கப்படும்' என்றார்.

முதல்வரை சந்தித்தது ஏன்

ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் கூறுகையில், 'முதல்வரை பொங்கல் விழா அனுமதிக்காக சந்திக்க சென்றேன். அதற்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை' என்றார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us