/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பா.ஜ., விவசாய அணி மாநில செயற்குழு கூட்டம்
/
பா.ஜ., விவசாய அணி மாநில செயற்குழு கூட்டம்
ADDED : அக் 30, 2025 11:14 PM

புதுச்சேரி:  புதுச்சேரி பா.ஜ., விவசாய அணி மாநில செயற்குழு கூட்டம் இந்திரா நகர் தொகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
விவசாய அணி மாநில தலைவர் பாரதிமோகன் தலைமை தாங்கினார். பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் சிறப்புரையாற்றினார். பா.ஜ., மாநில பொது செயலாளர்கள் மோகன்குமார், லட்சுமிநாராயணன், மாநில துணைத் தலைவி ஜெயலட்சுமி, மாநில மகளிர் அணி தலைவி  தாமரைச்செல்வி, ஊடக பிரிவு பொறுப்பாளர் நாகேஸ்வரன், தகவல் தொழில்நுட்ப பிரிவு  கார்த்திகேயன், மத்திய அரசின் திட்டங்கள் பிரிவு செந்தாமரை கண்ணன்.
உழவர்கரை மாவட்ட தலைவர் உலகநாதன், விவசாய அணி மாநில பொதுச் செயலாளர்கள் ராஜவேல், ஹரிஹரன், விவசாய அணி மாவட்ட தலைவர்கள் பிரகாஷ், சண்முக ராஜன் உள்ளிட்ட பா.ஜ., நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். விவசாய அணி மாநில துணைத்தலைவர் முத்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் .
மாநில விவசாய அணி பொது செயலாளர் ஹரிகரன் நன்றி கூறினார்.

