தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பா.ஜ., அங்கன்வாடி திருவிழா

பா.ஜ., அங்கன்வாடி திருவிழா

பா.ஜ., அங்கன்வாடி திருவிழா


UPDATED : அக் 06, 2026 11:33 PM

ADDED : அக் 06, 2026 04:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 11:33 PM ADDED : அக் 06, 2026 04:14 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: முதலியார்பேட்டை, வேல்ராம்பட்டு அங்கன்வாடி மையத்தில் பா.ஜ., சார்பில் அங்கன்வாடி திருவிழா நடந்தது.

புதுச்சேரி பா.ஜ., சார்பில், பிரதமர் நரேந்திர மோடியின் 76-வது பிறந்தநாள் மற்றும் அவரது 25 ஆண்டுகாலப் பொதுச்சேவையைப் போற்றும் வகையில், 'சேவை மாதம்' கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, முதலியார்பேட்டை தொகுதி வேல்ராம்பட்டு அங்கன்வாடி மையத்தில் 'அங்கன்வாடி திருவிழா' நடந்தது.

மாநில தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். மாநிலப் பொறுப்பாளர் சுரேந்திரன், சிறப்பாக பணியாற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார்.

விழாவில், கலந்து கொண்ட குழந்தைகள் மற்றும் மகளிர்களுக்கு சத்துமிக்க ஊட்டச்சத்து உணவுகள் மற்றும் பழங்கள் வழங்கப்பட்டன.

முன்னாள் எம்.எல்.ஏ., செல்வம், நிர்வாகிகள் வெற்றிச் செல்வம், தாமரைச்செல்வி, மகேஷ், ஜெயந்தி, சின்னத்தம்பி, அனிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us