காங்., துண்டு பிரசுரங்கள் ஓட்டுச்சாவடி அருகே வீச்சு: மாற்றுக் கட்சியினர் வாக்குவாதம்
காங்., துண்டு பிரசுரங்கள் ஓட்டுச்சாவடி அருகே வீச்சு: மாற்றுக் கட்சியினர் வாக்குவாதம்
UPDATED : அக் 06, 2026 11:33 PM
ADDED : அக் 06, 2026 04:14 PM

புதுச்சேரி: ஓட்டுச்சாவடி அருகே காங்., துண்டு பிரசுரங்கள் கிடந்ததால் மாற்று கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் ஓட்டு பதிவு சுப்பையா நகர் ஓட்டுச்சாவடியில் விறுவிறுப்பாக நடந்த நிலையில் 30 தெருக்களில் கைச்சின்னம் பொறிக்கப்பட்ட துண்டுச் சீட்டுகளை காங்., கட்சியினர் வீசி சென்றதாகக் கூறப்படுகிறது.
சுப்பையா நகர், முத்துலிங்க பேட்டை , ஏர்போர்ட் மெயின்ரோட்டில் அமைந்துள்ள ஓட்டுச்சாவடி முன்பாகவும் இந்தத் துண்டுப் பிரசுரங்கள் வீசப்பட்டதால் என்.ஆர்.காங்., - தி.மு.க., - இ.கம்யூ., உள்ளிட்ட மாற்றுக்கட்சியினர் கடும் ஆத்திரமடைந்தனர்.
இது குறித்து மாற்றுக்கட்சியினர் உடனடியாகக் தேர்தல் துறைக்கும் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் தேர்தல் அதிகாரிகளும், காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது அதிகாரிகளிடம் காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாற்றுக்கட்சியினர், விதிமுறைகளை மீறி துண்டுப் பிரசுரங்களை வீசிச் சென்றவர்களை கைது செய்ய வேண்டும். காவல்துறையும் தேர்தல் துறையும் இதற்கு உடந்தையாகச் செயல்படுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது எனக் குற்றம்சாட்டினர்.
அங்கு பதற்றமான சூழல் நிலவியதை அடுத்து, வீசப்பட்டிருந்த துண்டுச் சீட்டுகளைத் தேர்தல் துறையினர் அப்புறப்படுத்தினர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது
