UPDATED : அக் 06, 2026 11:29 PM
ADDED : அக் 06, 2026 04:06 PM
மேட்டுப்பாளையம் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். மேட்டுப்பாளையம் வி.எம்.கார்டன் பகுதியில், கோரிமேடு மதி என்பவர் குடிபோதையில் ரகளையில் ஈடுப்பட்டார். அவரை, மேட்டுப்பாளையம் போலீசார் கைது செய்தனர்.
ரெட்டியார்பாளையம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் விஷ்ணுபிரதாபன் மேரி உழவர்கரை பகுதியில் ரோந்து சென்றார். எம்.ஜி.ஆர்., நகர் ஆர்ச் பகுதியில், குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட, புதுச்சேரி அந்தோணி,28, என்பவரை கைது செய்தார்.
காலாப்பட்டு போலீசார், பெரியகாலாப்பட்டு பகுதியில் ரோந்து சென்றனர். ஜெயா தியேட்டர் அருகில் பெரிய முதலியார்சாவடி ஆதிமூலம்,50, குடிபோதையில் பொது மக்களிடம் தகராறில் ஈடுபட்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.
மங்கலம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சண்முகநாதன் தலைமையிலான போலீசார் திருக்காஞ்சி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட கண்டமங்கலம் சிலம்பரசன்,27; என்பவரை கைது செய்தனர்.
முதலியார்பேட்டை போலீசார் நுாறடிசாலையில் ரோந்து சென்றனர். அங்கு குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட முதலியார்பேட்டை எழிலன்,54, என்பவரை போலீசார் கைது செய்தனர்.
பாகூர் போலீசார் மணமேடு பகுதியில் ரோந்து சென்றனர். ஏரிக்கரை அய்யனார் கோவில் அருகே குடிபோதையில், ரகளையில் ஈடுபட்ட விழுப்புரம் பிரபாகரன்,35; என்பவரை கைது செய்தனர்.
சோரியாங்குப்பம் பகுதியில் பொதுமக்களை ஆபசமாக பேசிய தமிழக பகுதியை சேர்ந்த தண்டபானி,55; என்பவரை கைது செய்தனர்.
கிருமாம்பாக்கம் சிறப்பு ஏட்டு புதுப்பட்டான் தலைமையிலான போலீசார், முள்ளோடை பகுதியில் ரோந்து சென்றனர். தனியார் பார் எதிரில், ரகளையில் ஈடுபட்ட கடலுார், நாணமேடு சென்பகராமன்,54, என்பவரை கைது செய்தனர்.
