தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பார் உரிமையாளரை மிரட்டிய மூவர் மீது வழக்கு பதிவு

பார் உரிமையாளரை மிரட்டிய மூவர் மீது வழக்கு பதிவு

பார் உரிமையாளரை மிரட்டிய மூவர் மீது வழக்கு பதிவு


UPDATED : அக் 06, 2026 11:33 PM

ADDED : அக் 06, 2026 04:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 11:33 PM ADDED : அக் 06, 2026 04:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பெரியகாலாப்பட்டு விஜயரங்கன் மகன் ராஜ்குமார், 34. இவர், அதே பகுதியில் ரெஸ்டோ பார் நடத்தி வருகிறார். இவரிடம் கடந்த மே மாதம் அதே பகுதியை சேர்ந்த சுகன் என்கிற பிரதீப் கத்தியால் வெட்டி, தங்க மோதிரத்தை பறித்து சென்றார்.

இந்த வழக்கு சம்பந்தமாக சிறைக்கு சென்ற சுகன், கடந்த ஒரு வாரத்திற்கு முன் ஜாமினில் வந்துள்ளார். நேற்று முன்தினம் ராஜ்குமார் ரெஸ்டோ பாருக்கு வந்த இரண்டு நபர்கள் சுகன் அனுப்பியதாக கூறி, அங்கிருந்த ஊழியரிடம் ஓசியில் சரக்கு கேட்டனர்.

அங்கிருந்த ஊழியர், உரிமையாளர் இல்லாததால், சரக்கு தர மறுத்தார். இதனையடுத்து இருவரும் அவருக்கு மிரட்டல் விடுத்து அங்கிருந்து சென்றனர். இது குறித்து ராஜ்குமார் அளித்த புகாரின் பேரில் காலாப்பட்டு போலீசார் விசாரித்தனர்.

இதில், மிரட்டல் விடுத்தது கொழுவாரியை சேர்ந்த சந்துரு, ஜெபராஜ் என தெரிந்தது. இதனையடுத்து சுகன், சந்துரு, ஜெபராஜ் ஆகிய மூன்று பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். மேலும், சுகன் மீது, புதுச்சேரியல் ராஜ்குமாரை மிரட்டி ரூ.5 ஆயிரம் பணம் பறித்த வழக்கு பெரியகடை போலீசில் நிலுவையில் உள்ளது குறிப்பிடதக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us