பா.ஜ., வேட்பாளர் செல்வம் திட்டப்பணிகளை கூறி ஓட்டு சேகரிப்பு
பா.ஜ., வேட்பாளர் செல்வம் திட்டப்பணிகளை கூறி ஓட்டு சேகரிப்பு
ADDED : ஏப் 08, 2026 06:45 AM

புதுச்சேரி: மணவெளி தொகுதி பா.ஜ., வேட்பாளர் செல்வம், தொகுதியில் செய்த பணிகளை கூறி ஓட்டு சேகரித்தார்.
அப்போது அவர் கூறுகையில், எம்.எல்.ஏ.,வாக இருந்த 5 ஆண்டுகளில், தவளக்குப்பத்தில் புதிய துணை மின் நிலையம் அமைப்பதற்கான பணியை துவக்கி வைத்தேன். இளவரசன் நகர், லலிதா நகர், சீனுவாசா நகர், ரோகினி நகர், முத்து முதலியார் நகர், சடா நகர், ராமதாஸ் நகர் உள்ளிட்ட பல நகர் பகுதிகளில் புதிய சாலை மற்றும் கழிவுநீர் வடிகால் அமைத்து கொடுத்தேன்.
மணவெளியில் தொகுதியில் குடிநீர் பிரச்னையை போக்க புதிய ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது. குறைந்த மின் அழுத்தம் பிரச்னையை போக்க டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டுள்ளது.
முதியோர், விதவை மற்றும் குடும்ப தலைவிக்கு மாதந்திர உதவித்தொகை வழங்கியுள்ளேன். இந்த பணிகளை தொடர வரும் தேர்தலில், என்னை வெற்றிப்பெற செய்ய வேண்டுமாறு கூறி, ஓட்டு சேகரித்தார்.
