/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் பா.ஜ., மாநாடு பந்தக்கால் நடும் நிகழ்ச்சி
/
புதுச்சேரியில் பா.ஜ., மாநாடு பந்தக்கால் நடும் நிகழ்ச்சி
புதுச்சேரியில் பா.ஜ., மாநாடு பந்தக்கால் நடும் நிகழ்ச்சி
புதுச்சேரியில் பா.ஜ., மாநாடு பந்தக்கால் நடும் நிகழ்ச்சி
ADDED : டிச 29, 2025 05:44 AM

புதுச்சேரி: புதுச்சேரி பா.ஜ., அனைத்து பிரிவுகளின் சார்பில் மாநாடு, முதலியார்பேட்டை அரும்பார்த்தபுரம் புறவழிச்சாலையில் உள்ளதனியார் இடத்தில் வரும் 4ம் தேதி நடக்க உள்ளது.
மாநாட்டில் மத்திய அமைச்சர்கள்,பா.ஜ., கட்சியின்தேசிய நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். புதுச்சேரி பா.ஜ.,வின் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகளும் பங்கேற்கின்றனர்.
பா.ஜ., தலைவர் ராமலிங்கம் முன்னிலையில், இந்த மாநாட்டிற்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.அனைத்து பிரிவுகளின் மாநில அமைப்பாளர் அசோக்பாபு, மாநில இணை அமைப்பாளர் வேல்முருகன் தலைமை தாங்கினர்.
பிரிவுகளின் மாநில அமைப்பாளர்கள் ரமேஷ், ரவிச்சந்திரன், கண்ணன், சுதாகர், மாரியப்பன், மணிகண்டன், லட்சுமணசாமி, இணை அமைப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.