/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பா.ஜ., தேர்தல் மேலாண்மை குழுக்கூட்டம்
/
பா.ஜ., தேர்தல் மேலாண்மை குழுக்கூட்டம்
ADDED : டிச 23, 2025 04:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி 2026 சட்டசபை தேர்தலை முன்னிட்டு, புதுச்சேரி பா.ஜ., மாநில தலைமை அலுவலகத்தில் தேர்தல் மேலாண்மை குழுக்கூட்டம் நேற்றுநடந்தது.
நிகழ்ச்சி, மாநில தலைவர் ராமலிங்கம் தலைமையில் நடந்தது.கூட்டத்தில் பா.ஜ., மாநில பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா மற்றும் மாநில தேர்தல் மேன்மை குழு அமைப்பாளர் அருள்முருகன் ஆகியோர் கலந்து கொண்டு, பல்வேறு துறைகளில் நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்களை சந்தித்து துறை வாரியாக தேர்தல் பணிகள் குறித்து விரிவாக ஆலோசனை வழங்கினர்.
மேலும், தேர்தல் மேலாண்மை குழு துணை அமைப்பாளர்கள் ரவிச்சந்திரன், வெற்றிச்செல்வம் மற்றும் கோகிலா உட்பட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

