/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் இன்று பா.ஜ., நிர்வாகிகள் மாநாடு
/
புதுச்சேரியில் இன்று பா.ஜ., நிர்வாகிகள் மாநாடு
ADDED : ஜன 04, 2026 04:47 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் பா,ஜ., நிர்வாகிகள் மாநாடு இன்று நடக்கிறது.
இதுகுறித்து பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் கூறியதாவது;
புதுச்சேரி பா.ஜ., கட்சியின் அனைத்து பிரிவுகளின் நிர்வாகிகள் மாநாடு இன்று 4ம் தேதி அரும்பார்த்தபுரம் புறவழிச்சாலையில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில் நடக்கிறது.
மாநாடு மாலை 3:00 மணிக்கு துவங்கி, மாலை 6:00 மணிக்கு முடியும். மாநாட்டில், மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, தமிழக மாநில துணைத் தலைவர் குஷ்பூ, தமிழ்நாடு அனைத்து பிரிவுகளின் மாநில அமைப்பாளர் ராகவன் தொண்டர்களுக்கு ஆலோசனை வழங்குகிறார்.
பா.ஜ., அனைத்து மக்களிடமும் சென்று சேர வேண்டும். அதற்காக, புதுச்சேரி பா.ஜ.,வில் தொழில்துறை, வல்லுனர், அறிவுசார், மீனவர், அமைப்புச் சாரா தொழிலாளர், மருத்துவம், வர்த்தகம், வணிகம், கல்வியாளர்கள், சட்டத்துறை, முன்னாள் ராணுவத்தினர், ஆலயம் மற்றும் ஆன்மீகம், மத்திய அரசு திட்டங்கள், பிரசாரம், கலாசாரம் மற்றும் கூட்டுறவு பிரிவு என மொத்தம் 16 பிரிவுகள் உள்ளது.
இந்த 16 பிரிவுகளில் உள்ள மாநில, மாவட்ட, தொகுதி அளவில் உள்ள அமைப்பாளர்கள், இணை அமைப்பாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட 2,100 நிர்வாகிகள் மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.
மாநாட்டு ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் அசோக்பாபு, இணை ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன் மற்றும் குழுவினர் செய்து வருகின்றனர்.

