/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாலை சீரமைக்காததை கண்டித்து போராட்டம்
/
சாலை சீரமைக்காததை கண்டித்து போராட்டம்
ADDED : ஜன 04, 2026 04:46 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் சாலையை சீரமைக்காததை கண்டித்து, சாலையில் அமர்ந்து உணவு அருந்தும் நுாதன போராட்டத்தில் சமூக ஆர்வலர்ஈடுபட்டார்.
புதுச்சேரி, பாவானர் நகர், 4 வது பிரதான சாலை - பூமியான்பேட்டை குண்டு சாலை சந்திப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன் பாதாள சாக்கடை அமைக்க பள்ளம் தோண்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து, புதிதாக சாலை அமைக்காமல்,சாலை குண்டும் குழியுமாக இருந்தது.
இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். இதனை கண்டித்து நேற்று மாலை, சமூக ஆர்வலர் சுத்தம் சுந்தர்ராஜன், சேதமடைந்த சாலையில், தான் கொண்டு வந்த உணவை கொட்டி மீன்குழம்பு ஊற்றி சாப்பிட்டு, நுாதன போராட்டம் செய்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

