/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முதலியார்பேட்டையில் பா.ஜ., தேசிய கொடி பேரணி
/
முதலியார்பேட்டையில் பா.ஜ., தேசிய கொடி பேரணி
ADDED : மே 20, 2025 07:16 AM

புதுச்சேரி : பா.ஜ., சார்பில் முதலியார்பேட்டை தொகுதியில் அசோக்பாபு எம்.எல்.ஏ., ஏற்பாட்டில் நடந்த தேசிய கொடி பேரணியை அமைச்சர் நமச்சிவாயம் துவக்கி வைத்தார்.
காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக 'ஆபரேஷன் சிந்துார்' வெற்றி கரமாக நடத்திய ராணுவ வீரர்களுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தேசிய கொடி பேரணிமுதலியார்பேட்டை தொகுதியில் நேற்று நடந்தது.
பேரணியை அமைச்சர் நமச்சிவாயம் துவக்கி வைத்தார். பா.ஜ., மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி., அசோக்பாபு எம்.எல்.ஏ., அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர், முன்னாள் கவுன்சிலர்கள்செல்வகணபதி, பாஸ்கர், சத்யராஜ்,பா.ஜ., மாநில செயலாளர்வெற்றிசெல்வம்,என்.ஆர்.காங்., தலைவர் வீரபத்திரன், பா.ஜ., தொகுதி தலைவர் புவனேஸ்வரி உள்ளிட்ட ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள், பள்ளி மாணவர்கள், மகளிர்கள் கையில் தேசிய கொடியுடன் கலந்து கொண்டனர்.
புவன்கரை வீதி பெட்ரோல் பங்க் அருகே துவங்கிய தேசி கொடி பேரணி மில் வீதி, கடலுார் மாலை, மரப்பாலம் வழியாக புவன்கர வீதியில் முடிவடைந்தது.