ADDED : ஏப் 15, 2025 04:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பா.ஜ., கட்சியின் ஸ்தாபன தினத்தையொட்டி பைக் பேரணி நடந்தது.
பா.ஜ., கட்சியின் 45 ம் ஆண்டு ஸ்தாபன தினம், அம்பேத்கர் 134-வது ஜெயந்தி முன்னிட்டு இருசக்கர வாகன பேரணி வீராம்பட்டினத்தில் இருந்து அரியாங்குப்பம் வரை நடந்தது. இதில் 500க்கும் மேற்பட்ட பா.ஜ., தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
பா.ஜ., மாநில தலைவர் செல்வகணபதி பேரணியை துவக்கி வைத்தார். தொடர்ந்து அரியாங்குப்பம் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அசோக் பாபு எம்.எல்.ஏ., மாநில பொதுச்செயலாளர் மவுலிதேவன், துணைத் தலைவர் பழனி மாவட்டத் தலைவர் சுகுமாரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தொகுதி தலைவர் வசந்தராஜ் ஏற்பாடுகளை செய்திருந்தார்.