/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பா.ஜ., நிறுவனர் பிறந்த நாள் விழா
/
பா.ஜ., நிறுவனர் பிறந்த நாள் விழா
ADDED : ஜூலை 09, 2025 08:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி, : பா.ஜ., நிறுவனர் ஷியாமா பிரசாத் முகர்ஜி 125வது பிறந்தநாள் விழா உழவர்கரை மாவட்ட பா.ஜ., சார்பில், தட்டாஞ்சாவடி தொகுதி, கொக்குபார்க் அருகே ரமணாஷங்கர் தலைமையில் நடந்தது.
விழாவில், மாவட்ட தலைவர் உலகநாதன், மாநில கல்வி பிரிவு தலைவர் நாகேஸ்வரன் ஆகியோர் அவரது உருவ படத்திற்கு மலர்துாவி மரியாதை செலுத்தினர்.
மாநில முன்னாள் செயலாளர் முருகன், முன்னாள் மாநில மகளிரணி தலைவி ஜெயந்தி ஷர்மா, முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினர்கள் செல்வராஜ், உமாபதி, முன்னாள் மாவட்ட பொதுசெயலாளர் பிரகாஷ், மாவட்ட மகளிரணி தலைவி வனிதா மேகநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.