பிரதமர் மோடி ஆட்சியின் சாதனை: பா.ஜ., வினர் விழிப்புணர்வு பேரணி
பிரதமர் மோடி ஆட்சியின் சாதனை: பா.ஜ., வினர் விழிப்புணர்வு பேரணி
UPDATED : நவ 03, 2026 04:26 AM
ADDED : நவ 02, 2026 09:20 PM

காரைக்கால்: காரைக்காலில் பா.ஜ., சார்பில் பிரதமர் மோடி ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் எடுத்துரைக்க விழிப்புணர்வு பேரணியை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் துவக்கி வைத்தார்.
காரைக்கால் மாவட்ட பா.ஜ., சார்பில் ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும், வன்முறையாளர்களை அகற்றி பிரதமர் மோடியின் ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் எடுத்துரைக்கும் விழிப்புணர்வு பேரணி இன்று (நவ.,2) நடந்தது. நிகழ்ச்சியில் பா.ஜ., மாநிலத் தலைவர் ராமலிங்கம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.வேளாண்துறை அமைச்சர் ராஜசேகரன். எம்.எல்.ஏ.க்கள் மீனாட்சிசுந்தரம், விக்னேஸ்வரன்
முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் முருகதாஸ் வரவேற்றார்.
பிரதமர் மோடி தலைமையிலான வளர்ச்சியடைந்த பாரதத்தின் பயணத்தையும், அவரது 25 ஆண்டுகால தொடர் வெற்றிப் பயணத்தையும் எதிர்கொள்ள முடியாத எதிர்க்கட்சிகள், நாட்டின் அமைதிக்கும், குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றன இதை பொதுமக்களிடம் விழிப்புணர்வுடு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடநணதது.
இப்பேரணி புதிய பேருந்து நிலையத்தில் துவங்கி பிரதான சாலைகள் வழியாக அம்மையார் கோவில் நிறைவடைந்தது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் சபாநாயகர் செல்வம். பா.ஜ., பிரமுகர்கள் அருள்முருகன், துரைசோனதிபதி.விக்டர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
