/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பா.ஜ., மாநில தலைவர் பதவி கட்சி தலைமை முடிவை ஏற்பேன்; அமைச்சர் நமச்சிவாயம் பேட்டி
/
பா.ஜ., மாநில தலைவர் பதவி கட்சி தலைமை முடிவை ஏற்பேன்; அமைச்சர் நமச்சிவாயம் பேட்டி
பா.ஜ., மாநில தலைவர் பதவி கட்சி தலைமை முடிவை ஏற்பேன்; அமைச்சர் நமச்சிவாயம் பேட்டி
பா.ஜ., மாநில தலைவர் பதவி கட்சி தலைமை முடிவை ஏற்பேன்; அமைச்சர் நமச்சிவாயம் பேட்டி
ADDED : ஜன 25, 2025 05:29 AM

திருக்கனுார் : மண்ணாடிப்பட்டு தொகுதியில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பட்டுத் துறையின் சார்பில், முதியோர், விதவைகளுக்கான பென்ஷன் பெறுவதற்கான ஆணையை அமைச்சர் நமச்சிவாயம் வழங்கினார்.
இதில், முன்னாள் எம்.எல்.ஏ., அருள்முருகன், கொம்யூன் ஆணையர் எழில்ராஜன், பா.ஜ., நிர்வாகிகள் கலியபெருமாள், ஜெயக்குமார், ராஜா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
பின், அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது;
புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவி விவாகரத்தில் அரசு முறையாக நடவடிக்கை எடுத்துள்ளது. சம்மந்தபட்ட மாணவி புகார் கொடுக்க மாட்டேன் என கூறியதால், நிர்வாகம் மூலம் புகார் பெற்று, சம்மந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். முழு விசாரணைக்கு பின், கோர்ட் உரிய நடவடிக்கை எடுக்கும். இதில், அரசியல் ஆதாயம் தேடுவதை எதிர்க்கட்சிகள் வாடிக்கையாக கொண்டுள்ளன.
மது ஆலை வழங்குவதில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றனர். வரி வருவாயை அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காகதான் இதுபோன்று அரசு ஒருசில முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. அதில் ஏதேனும் தவறு நடக்கிறது என்று தெரிந்தால், உரிய ஆதாரத்துடன் சொன்னால், அது எத்தகையாக விசாரணையாக இருந்தாலும் சந்திக்க அரசு தயாராக உள்ளது.
பா.ஜ., தலைவர் குறித்து கட்சி தலைமை முடிவு செய்து அறிவிக்கும். தற்போது தான் மாவட்டம், தொகுதி தலைவர்கள் நியமிக்கப்பட்டு, பதவியேற்று வருகின்றனர். படிப்படியாக தான் மாநில தலைவர் அறிவிப்பும் வரும்.
தலைவர் பதவி குறித்து பா.ஜ., தொண்டன் என்ற முறையில், கட்சி தலைமை முடிவை ஏற்பேன்' என்றார்.

