ADDED : செப் 27, 2026 08:41 PM
புதுச்சேரி: புதுச்சேரி பா.ஜ., தலைமை அலுவலகத்தில், புதிய பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள சுரேந்திரன் அறிமுக கூட்டம் நடந்தது.
மாநில தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார்.
மாநிலப் பொறுப்பாளர் சுரேந்திரன் பேசியதாவது: பா.ஜ., நிர்வாகிகள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் உள்ள கிளைகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். கிளை முதல் தொகுதி, மாவட்டம் மற்றும் மாநிலம் வரை கட்சியின் அடிப்படை அமைப்பை வலுப்படுத்தி கட்சியை மேலும் வளர்க்க வேண்டும்.
வரும் தேர்தல் காலங்களில், கட்சி அமைப்பு வலிமையை மேலும் அதிகரிக்க வேண்டும். மக்கள் தொடர்பு பணிகளை தீவிரபடுத்தி அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். கட்சி நிர்வாகிகள் எந்த நேரத்திலும் என்னை தொடர்பு கொண்டு ஆலோசனைகளை பெறலாம். கிளை முதல் மாவட்டம் வரை கட்சியின் அமைப்பு பணிகளை நேரடியாக ஆய்வு செய்து வலுப்படுத்தும் வகையில், மாநிலத் தலைவர் ராமலிங்கத்துடன் மாநில அளவிலான சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்படும்’ என்றார்.
கூட்டத்தில், அமைச்சர் ராஜசேகரன், எம்.எல்.ஏ.,க்கள் மீனாட்சி சுந்தரம், விக்னேஸ்வரன், முன்னாள் சபாநாயகர் செல்வம், முழுநேர அமைப்பு பொறுப்பாளர் தசரத், பொதுச் செயலாளர்கள் மோகன்குமார், லட்சுமிநாராயணன், அசோக்பாபு உட்பட பலர் பங்கேற்றனர்.
