தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஐ.டி., நிறுவன பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு

ஐ.டி., நிறுவன பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு

ஐ.டி., நிறுவன பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு


ADDED : செப் 27, 2026 08:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 27, 2026 08:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ஐ.டி., நிறுவன பெண்ணை தாக்கியவர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். 

பெங்களூரு, டி.சி. பாளையத்தை சேர்ந்தவர் ஜெயந்த்குமார் இவரது மனைவி ரிவாஸ்,  37; ஐ.டி., நிறுவன ஊழியர். இவருக்கு சென்னையை சேர்ந்த அஜித் பிரசாத் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 6ம் தேதி அஜித் பிரசாத்துடன், ரிவாஸ் புதுச்சேரி சுற்றுலா வந்துள்ளார். இருவரும் காரில் பல்வேறு இடங்களில் சுற்றி பார்த்தனர்.

இருவரும் காரில் மிஷன் வீதி வழியாக வந்து கொண்டிருந்தபோது, இவர்களுக்குள் வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. அஜித் பிரசாத், ரிவாஸை திட்டி, கைகளால் தாக்கினார்.

இதில் ரிவாசுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ரிவாஸ் பெங்களூரு சென்று அங்குள்ள  மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அதன்பிறகு இதுகுறித்து புதுச்சேரி பெரியக்கடை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து, அஜித் பிரசாத்தை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us