/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை முகாம்
/
பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை முகாம்
ADDED : செப் 26, 2024 03:22 AM

புதுச்சேரி : காமராஜர் நகர் தொகுதியில் பாஜ., உறுப்பினர் சேர்க்கை முகாம் ஜான் குமார் எம்.எல்.ஏ., தலைமையில் நேற்று நடந்தது.
புதுச்சேரி பாஜ.,சார்பில் மாநிலம் முழுவதும் புதிதாக உறுப்பினர் சேர்க்கை முகாம் தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது.
அதை யொட்டி காமராஜர் நகர் தொகுதியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் 45 அடி ரோடு ஜான் குமார் எம்.எல்.ஏ., அலுவலகம் அருகே நேற்று நடந்தது.
ஏற்கனவே ஆயிரம் பேர் காமராஜர் நகர் தொகுதியில் உறுப்பினராக சேர்ந்துள்ளதாகவும், இன்னும் பலரை உறுப்பினராக சேர்க்கும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு வருவதாக ஜான் குமார எம்.எல்.ஏ., கூறினார்.
சேர்க்கை முகாமில் கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.