ADDED : செப் 30, 2024 05:46 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: முத்தியால்பேட்டையில் பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.
நாடு முழுவதும் பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக புதுச்சேரி, முத்தியால்பேட்டை பகுதியில் மாநில துணைத்தலைவர் சிவக்குமார் தலைமையில், காமராஜர் பள்ளி அருகில் சேர்க்கை முகாம் நடந்தது.
இதில் பிரதமர் மோடியின் திட்டத்தால் பயன் பெற்றவர்கள், அவரது செயல் திறமையால் கவரப்பட்டவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பா.ஜ.,வில் உறுப்பினர்களாக தங்களை இணைத்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாநிலத் தலைவர் செல்வகணபதி எம்.பி., பொறுப்பாளர் இளங்கோவன், கட்சி நிர்வாகிகள் நக்கீரன், பாலா, ஈஸ்வரி, சுதா, பிரதீபா, சந்துரு, ருத்தேஷ், சாரதி, சீனிவாசன், சந்துரு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
