UPDATED : அக் 24, 2026 05:26 PM
ADDED : அக் 24, 2026 05:24 PM

அரியாங்குப்பம்: பா.ஜ., சார்பில் ஜனநாயகத்தை காப்போம், வன்முறையாளர்களை ஒழிப்போம் இயக்கம் மூலம் தேசிய ஆலோசனை கலந்துரையாடல் கூட்டம் தவளக்குப்பத்தில் நடந்தது.
முன்னாள் சபாநாயகர் செல்வம் தலைமை தாங்கினார். மண்டலத் தலைவர் லட்சுமிகாந்தன் வரவேற்றார். பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில், எஸ்.ஐ.ஆர்., பற்றி சிறப்பு வாக்காளர் திருத்தம் பற்றிய தவறான புரிதல் எடுத்துரைக்கப்பட்டது. நம் நாட்டில் தவறான தகவல்களைப் பரப்பி நடத்தி வரும் போராட்டங்களில் மாணவர்கள், இளைஞர்கள் ஈடுபடாதவாறு அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வரும் நாட்களில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என, கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில், மாநில துணை தலைவர் ஜெயக்குமார், அலுவலக பொறுப்பாளர் ரவிச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் அசோக்பாபு, தீபாய்ந்தான், மாநிலச் செயலாளர் ஹேமமாலினி மாவட்ட தலைவர் சுகுமார் மாவட்ட பொறுப்பாளர் ஆனந்தன் மாநில விவசாய அணி தலைவர் பாரதி மோகன், சக்திபாலன், கிருஷ்ணமூர்த்தி, தட்சிணாமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர். அய்யனாரப்பன் நன்றி கூறினார்.
