ADDED : ஆக 13, 2025 02:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : 70வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, புதுச்சேரி மாவட்ட பா.ஜ., சார்பில் நிர்வாகிகள் தேசிய கொடி வாகன ஊர்வலம் சென்றனர்.
கருவடிக்குப்பம் சித்தானந்தா கோவிலில் தொடங்கிய ஊர்வலத்தை அமைச்சர் நமச்சிவாயம் துவக்கி வைத்தார். ஊர்வலம் முத்தியால்பேட்டை, நேரு வீதி, அரசு மருத்துவமனை சாலை, ஆம்பூர் சாலை வழியாக எல்லைபிள்ளைசாவடி, இந்திரா காந்தி மகப்பேறு மருத்துவமனை அருகே வந்து நிறைவடைந்தது. மாநில தலைவர் ராமலிங்கம் தலைமையில் பங்கேற்ற நிர்வாகிகள், இருசக்கர வாகனங்களில் தேசிய கொடி ஏந்தி கொண்டு, முழக்கமிட்டு ஊர்வலம் சென்றனர்.