/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் மீண்டும் இரட்டை இன்ஜின் அரசு பா.ஜ., தேசிய பொதுச்செயலாளர் தகவல்
/
புதுச்சேரியில் மீண்டும் இரட்டை இன்ஜின் அரசு பா.ஜ., தேசிய பொதுச்செயலாளர் தகவல்
புதுச்சேரியில் மீண்டும் இரட்டை இன்ஜின் அரசு பா.ஜ., தேசிய பொதுச்செயலாளர் தகவல்
புதுச்சேரியில் மீண்டும் இரட்டை இன்ஜின் அரசு பா.ஜ., தேசிய பொதுச்செயலாளர் தகவல்
ADDED : ஜூலை 01, 2025 02:14 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் மீண்டும் இரட்டை இன்ஜின் அரசு அமையும் என பா.ஜ., தேசிய பொதுச்செயலாளர் தருண் சுக் பேசினார்.
புதுச்சேரி பா.ஜ., மாநில தலைவர் பதவி ஏற்பு விழாவில் அவர் பேசியதாவது;
பிரதமர் மோடி 2014ல் பதவி ஏற்றபோது, எனது அரசு ஏழைகளுக்கான அரசாக இருக்கும். பெண்களை முன்னேற்றும் அரசாக இருக்கும். நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான அரசாக இருக்கும் என சபதமேற்றார். அதன்படி அவர் பிரதமராக பொறுப்பேற்றதில் இருந்து ஏழைகளின் முன்னேற்றத்திற்காக பணியாற்றி வருகிறார். 12 ஆயிரம் ஏழைகளின் வீட்டிற்கு காஸ் இணைப்பு வழங்கினார். 15 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக பணம் செலுத்தி வருகிறார். பெண்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பதற்காக 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியுள்ளார்.
புதுச்சேரி அரசு இரட்டை இன்ஜின் பூட்டிய மாநிலமாக அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெற்று வருகிறது. இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது
பல்வேறு துறைகளில் காலி பணியிடங்கள் ஊழலற்ற முறையில், வெளிப்படை தன்மையுடன் நிரப்பப்பட்டு வருகிறது. , தீவிரவாதிகளை ஊக்குவிக்கும் நாட்டிற்குள் ஊடுருவி சர்ஜிக்கல் ஆபரேஷன் நடத்தி, உலகையை திரும்பி பார்க்க வைத்துள்ளோம்.
நமது பிரதமரின் விக்சித் பாரத் இலக்கை நோக்கிய பயணத்தில், நமது அமைப்பு தேர்தலில் புதுச்சேரி மாநில தலைவராக ராமலிங்கம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வளர்ச்சி அடைந்த பாரத்தின் முன்னேடியாக புதுச்சேரி விளங்கி வருகிறது
புதிய தலைவர் பதவியேற்பு விழாவில் பங்கேற்றுள்ள தொண்டர்கள், இங்கிருந்து செல்லும் போது, வளர்ச்சி அடைந்த பாரதம் மற்றும் இரட்டை இன்ஜின் புதுச்சேரி அரசின் சாதனைகளை மக்களிடையே கொண்டு சென்று, வரும் 2026ல் தேர்தலில் மகத்தான வெற்றி பெற உறுதியேற்க வேண்டும். வரும் 2026ல் மீண்டும் புதுச்சேரியில் இரட்டை இன்ஜின் அரசு அமையும் என உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.