UPDATED : அக் 31, 2026 06:12 PM
ADDED : அக் 31, 2026 06:09 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: ஏனாமில் புயலால் பாதிக்கப்பட்டவர்களை, பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் தலைமையில் நிர்வாகிகள் சந்தித்து நிவாரணம் வழங்கினர்.
ஏனாமில் அர்னாப் புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதையடுத்து, புதுச்சேரி பா.ஜ., சார்பில், மாநில தலைவர் ராமலிங்கம் தலைமையில் நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டனர். தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து, அவர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண உதவிகள் வழங்கினர்.
அப்போது, முன்னாள் சபாநாயகர் செல்வம் ஏனாம் தொகுதி தலைவர் பவன் பிரசாத், முன்னாள் எம்.எல்.ஏ., தங்க விக்ரமன், பா.ஜ., மாநில மகளிர் அணி பொறுப்பாளர் ஜெயந்தி, ஏனாம் பகுதி பா.ஜ., நிர்வாகிகள் கலந்து கொண்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கினர்.
