/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி காங்., அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி ராகுலை கண்டித்து பா.ஜ., பேரணியால் பரபரப்பு
/
புதுச்சேரி காங்., அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி ராகுலை கண்டித்து பா.ஜ., பேரணியால் பரபரப்பு
புதுச்சேரி காங்., அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி ராகுலை கண்டித்து பா.ஜ., பேரணியால் பரபரப்பு
புதுச்சேரி காங்., அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி ராகுலை கண்டித்து பா.ஜ., பேரணியால் பரபரப்பு
ADDED : செப் 02, 2025 03:23 AM

புதுச்சேரி: பிரதமரை, அவதுாறாக பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுலை கண்டித்து, பா.ஜ., வினர் கண்டன பேரணியாக, காங்., கட்சி அலுவலகத்தை முற்றுகையிட சென்றதால், பரபரப்பு ஏற்பட்டது.
பிரதமர் மோடியை பற்றி, அவதுாறாக பேசிய, எதிர் கட்சி தலைவர் ராகுல் மற்றும் காங்., கட்சியை கண்டித்து, புதுச்சேரி பா.ஜ.,வினர் நேற்று மறைமலை அடிகள் சாலை, சுதேசி மில் அருகில், மாலை 5:00 மணியளவில், பா.ஜ., தலைவர் ராமலிங்கம் தலைமையில், கண்டன பேரணி துவங்கியது.
பேரணியில், அமைச்சர் ஜான்குமார், முன்னாள் அமைச்சர் சாய் சரவணன்குமார், எம்.எல்.ஏ.,க்கள், கல்யாணசுந்தரம், செல்வம், தீப்பாய்ந்தான், பா.ஜ., கட்சி நிர்வாகிகள் துணை தலைவர்கள் ரத்தனவேல், ஜெயலட்சுமி, சரவணன், அம்மாவாசை, ஜெயக்குமார், பழனி, மாநில செயலாளர்கள் தமிழ்மாறன், ராமு, புகழேந்தி மாநில பொருளாளர் ராஜகணபதி, கார்த்திகேயன், நாகேஸ்வரன், அணித்தலைவர்கள் பாரதிமோகன், தாமரைச்செல்வி, மாவட்ட பொறுப்பாளர் வெற்றிச்செல்வம், மாவட்ட தலைவர்கள் கிருஷ்ணராஜ், உலகநாதன், இணை பொறுப்பாளர்கள் வேல்முருகன் என 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட தொண்டர்கள் கட்சி கொடியுடன் சென்றனர்.
மறைமலை அடிகள் சாலை, அண்ணாசாலை வழியாக சென்று வைசியாள் வீதியில் உள்ள காங்., கட்சி அலுவலகத்தை முற்றுகையிட சென்றனர். அதற்கு முன்பாக, போலீசார், அண்ணா சாலை, கொசக்கடை தெரு சந்திக்கும் இடத்தில்,பேரிக்கார்டு வைத்து தடுத்தி நிறுத்தினர். மேலும், நேரு வீதி வாயில் முன்பு, போலீஸ் வாகனத்தை குறுக்கே நிறுத்தி தடுத்தனர்.
தொடர்ந்து, கட்சி தொண்டர்கள், மாலை 6:45 மணி வரை அங்கேயே நின்று, ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.
அதே நேரத்தில், பேரிக்கார்டு அமைக்கப்பட்ட இடத்தின் அருகே, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., அனந்தராமன் 10க்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்களை அழைத்து வந்து, கட்சி அலுவலகத்திற்கு நுழையாமல் இருக்க நின்றததால், பரபரப்பு ஏற்பட்டது. கண்டன பேரணியின் போது, அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.