ADDED : டிச 05, 2024 06:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: உழவர்கரை தொகுதி மக்களுக்கு, பா.ஜ., மாநில செயலாளர் சரவணன் நிவாரண பொருட்கள் வழங்கினார்.
புயல், மழையால் பாதிக்கப்பட்ட உழவர்கரை தொகுதியில் உள்ள 5 ஆயிரம் மக்களுக்கு, அரிசி, கோதுகை உள்ளிட்ட நிவாரண பொருட்களை பா.ஜ., மாநில செயலாளர் சரவணன் தொடர்ந்து, மூன்றாவது நாளாக நேற்று வழங்கினார். தொடர்ந்து, அப்பகுதியில் சாய்ந்த மரங்களை இளைஞர்களுடன் இணைந்து அப்புறப்படுத்தினார்.
மழைநீரை வெளியேற்றவும், துண்டிக்கப்பட்ட மின் விநியோகம் செய்வதற்கு, மின்துறை அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு, உடனடியாக, சீர் செய்ய வலியுறுத்தினார்.