/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பா.ஜ., மாநில பொறுப்பாளர் மாற்றம்? கூட்டணி பேச்சுவார்த்தைக்காக திட்டம்
/
பா.ஜ., மாநில பொறுப்பாளர் மாற்றம்? கூட்டணி பேச்சுவார்த்தைக்காக திட்டம்
பா.ஜ., மாநில பொறுப்பாளர் மாற்றம்? கூட்டணி பேச்சுவார்த்தைக்காக திட்டம்
பா.ஜ., மாநில பொறுப்பாளர் மாற்றம்? கூட்டணி பேச்சுவார்த்தைக்காக திட்டம்
ADDED : ஜன 18, 2026 06:33 AM
முதல்வர் ரங்கசாமியிடம் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஏதுவாக புதுச்சேரி பொறுப்பாளராக அண்ணாமலை நியமிக்கப்பட உள்ள தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த சட்டசபை தேர்தலில் பாஜ.,, அ.தி.மு.க., கூட்டணியுடன் வெற்றி பெற்ற என்.ஆர்.காங்., கட் சி, வரும் தேர்தலிலும் அதே கூட்டணியுடன் தேர்தலை சந்திக்க உள்ளது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக தன்னுடைய அலுவல் ரீதியான கோப்புகளுக்கு தடை, புதிய உத்தரவுகள் பிறப்பிப்பு என முதல்வருக்கு எதிர் மறையான நிலை கவர்னர் மாளிகையில் இரு ந்து வந்ததால், கவர்னர் கைலாஷ் நாதன், முதல்வர் ரங்கசாமி உறவில் விரிசல் ஏற்பட்டு பாஜ.,வினரை சந்திப்பையே முதல்வர் ரங்கசாமி தவிர்த்து வந்தார்.
கவர்னர் - முதல்வர் மோதலை முடிவுக்கு கொண்டு வரும் பொருட்டு, சில மாதங்களுக்கு முன், பாஜ., மாநில பொறுப்பாளர் சுரானா மற்றும் முக்கிய நிர்வாகிகள் முதல்வரை அவரது வீட்டில் சந்தித்து பேசினார்.
அப்போது, கோபத்தில் இருந்த முதல்வர் ரங்கசாமி சரியான பதிலை தராமல், தேர்தல் நெருக்கத்தில் கூட்டணி பற்றி பேசிக் கொள்ளலாம் எனக் கூறி, வந்தவர்களை திரும்பி அனுப்பினார். அதன் பின்னர் கடந்த மாதம் மீண்டும் முதல்வரை சந்தித்த பாஜ.,வினரிடம், முதலில் தன்னுடைய ஆட்சியை கடுமையாக விமர்சித்து வரும் ல.ஜ.க., மற்றும் அவருடன் தொடர்பில் உள்ள பா.ஜ.,வை சேர்ந்த அமைச்சர் ஜான்குமார் ஆகியோரின் வாய்களை மூடிவிட்டு வாருங்கள். பிறகு, கூட்டணி குறித்து பேசலாம் எனக்கறி திருப்பி அ னுப்பினார்.
தமிழகத்தில் பல மாதங்களுக்கு முன்பே கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்துள்ள நிலையில், புதுச்சேரியில் மட்டும் கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ளதை உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கடும் நெருடலை ஏற்படுத்தியது. அதையொட்டி இம்மாத இறுதியில் அமித்ஷா புதுச்சேரி வருவதற்கு முன்பு கூட்டணி பேச்சுவார்த்தை முடிவு செய்ய பா.ஜ., திட்டமிட்டுள்ளது.
அதனால், முதல்வர் ரங்கசாமியை குளிர்விக்கும் விதமாக புதுச்சேரி மாநில பொறுப்பாளராக உள்ள சுரானாவை மாற்றிவிட்டு, அவருக்கு பதிலாக தமிழக முன்னாள் தலைவர் அண்ணாமலையை புதுச்சேரி மாநில பா.ஜ., பொறுப்பாளராக நியமித்து கூட்டணி பேச்சு வார்த்தை நடத்த பா.ஜ., தலைமை திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

