/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பா.ஜ., துணை தலைவர் பிறந்தநாள் விழா
/
பா.ஜ., துணை தலைவர் பிறந்தநாள் விழா
ADDED : ஆக 29, 2025 03:17 AM

புதுச்சேரி: பா.ஜ., மாநில துணை தலைவர் சரவணன் பிறந்தநாள் விழாவையொட்டி, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
விழாவையொட்டி, ரெட்டியார்பாளையத்தில் உள்ள விநாயகர் ஆலயத்தில் குடும்பத்தினருடன் சிறப்பு பூஜை செய்து அன்னதானம் வழங்கினார். பின், தேவாலயம் மற்றும் தர்காவில் நடத்தப்பட்ட மும்மத பிரார்த்தனையில் கலந்து கொண்டார். உழவர்கரை பகுதியிலுள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
உழவர்கரை, ஜவகர்நகர், பவாணன் நகர், பிச்சவீரன்பட்டு, மூலகுளம் ரெட்டியார்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ஏராளமானோருக்கு உணவு வழங்கினார்.
முன்னதாக ரெட்டியார்பாளையம் கம்பன் நகர் பகுதியில் பா.ஜ., நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் ஏற்பாட்டில் நடந்த பிறந்தநாள் விழாவில், பிரம்மாண்ட கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. சிறு, குறு தொழில் முனைவோருக்கு தள்ளுவண்டி மற்றும் கடை,மகளிர் சுய உதவி குழு பெண்களுக்கு தையல் இயந்திரங்கள், 3 ஆயிரம் பெண்களுக்கு சேலைகள்,மாற்றுத் திறனாளிகளுக்கு நான்கு சக்கர தள்ளுவண்டிகள்,சலவைத் தொழிலாளர்களுக்கு சலவை பெட்டிகள் வழங்கப்பட்டன.
விழாவில், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம், எம்.எல்.ஏ.,க்கள் ஆறுமுகம், ரமேஷ், தீப்பாய்ந்தன், முன்னாள் எம்.எல்.ஏ., அசோக்பாபு உட்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.