தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பா.ஜ., மகளிர் அணி கண்டன ஆர்ப்பாட்டம்

பா.ஜ., மகளிர் அணி கண்டன ஆர்ப்பாட்டம்

பா.ஜ., மகளிர் அணி கண்டன ஆர்ப்பாட்டம்


UPDATED : அக் 11, 2026 01:41 AM

ADDED : அக் 11, 2026 01:37 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 11, 2026 01:41 AM ADDED : அக் 11, 2026 01:37 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: காங்., எம்.பி., மீதான புகாருக்கு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புதுச்சேரி பா.ஜ., மகளிர் அணி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த காங்., எம்.பி., அங்கோம்சா பிமோல் அகோய்ஜாம், கல்லுாரி மாணவிகளிடம் முறைகேடாக நடந்து கொண்டதாக எழுந்த புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், இவ்விவகாரத்தில் அவரை பாதுகாப்பதாக லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை கண்டித்தும், புதுச்சேரி பா.ஜ., மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

பழைய பஸ் நிலையம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச் செயலாளர்கள் மோகன்குமார், லட்சுமி நாராயணன், நகர மாவட்ட தலைவர் கிருஷ்ணராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர், மாநில துணைத் தலைவர்கள் பழனி, மாநில செயலாளர்கள் தமிழ்மாறன், ஹேமமாலினி , மகளிர் அணி பொறுப்பாளர் ஜெயந்தி, மகளிர் அணி மாநில பொதுச் செயலாளர் பிரியா, மாநில துணைத் தலைவர்கள் மஞ்சு, கீதா, மாநில செயலாளர் சத்யா, நகர மாவட்ட மகளிர் அணி தலைவி அனிதா உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us