sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வைரமுத்துவை கண்டித்து பா.ஜ., மகளிரணி ஆர்ப்பாட்டம்

வைரமுத்துவை கண்டித்து பா.ஜ., மகளிரணி ஆர்ப்பாட்டம்

வைரமுத்துவை கண்டித்து பா.ஜ., மகளிரணி ஆர்ப்பாட்டம்


ADDED : ஆக 12, 2025 02:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 12, 2025 02:51 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ராமரை இழிவுபடுத்தி பேசிய கவிஞர் வைரமுத்துவை கண்டித்து, புதுச்சேரியில் பா.ஜ., மாநில மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னையில் நடந்த கம்பன் விழாவில், விருது பெற்ற கவிஞர் வைரமுத்து, ராமரை அவதுாறாக இழிவுபடுத்தி பேசியுள்ளார். இவரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், புதுச்சேரியில் இந்திராகாந்தி சிலையருகே பா.ஜ., மாநில மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

தலைவர் ராமலிங்கம் வழிகாட்டுதலின் பேரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாநில தலைவி தாமரைசெல்வி தலைமை தாங்கினார். பொது செயலாளர்கள் மோகன்குமார், லட்சுமி நாராயணன், துணை தலைவர் ரத்தினவேலு, செயலாளர்கள் தமிழ்மாறன், கோகிலா, இணை அமைப்பாளர் வேல்முருகன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதில், வைரமுத்துவை கண்டித்து நிர்வாகிகள் கண்டன கோஷங்களை எழுப்பியதோடு, அவரின் உருவபடத்தை கிழித்து கண்டனத்தை வெளிப்படுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us