/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பா.ஜ., மகளிரணி செயற்குழு கூட்டம்
/
பா.ஜ., மகளிரணி செயற்குழு கூட்டம்
ADDED : அக் 29, 2025 11:30 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: புதுச்சேரி பா.ஜ., மகளிரணி செயற்குழு கூட்டம் தவளக்குப்பத்தில் நடந்தது.
மகளிரணி தலைவி, தாமரைசெல்வி தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர்கள் பிரியா, விஜயலட்சுமி வரவேற்றனர். கட்சியின் பொதுச் செயலாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். மாநில தலைவர் ராமலிங்கம் கூட்டத்தை துவக்கி வைத்தார். பெண் குழந்தைகளின் எதிர்கால நிதி பாதுகாப்பிற்காக செல்வமகள் சேமிப்பு திட்டம், பெண்களின் பொருளாதார வளர்ச்சிக்காக, தொழில் துவங்க முத்ரா திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்து, சாதனை செய்துள்ள மத்திய அரசுக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

