ADDED : நவ 05, 2025 07:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி பா.ஜ., நகர, மாவட்ட செயற்குழு கூட்டம் செண்பகா ஓட்டலில் நடந்தது.
நகர மாவட்ட தலைவர் கிருஷ்ணராஜ் தலைமை தாங்கினார். மாநில தலைவர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார்.
பொதுச் செயலாளர்கள் லட்சுமி நாராயணன், மோகன் குமார் மற்றும் மாநில அணி பிரிவு அமைப்பாளர் அசோக் பாபு, மாநில துணைத் தலைவர் ஜெயலட்சுமி, முன்னாள் எம்.எல்.ஏ., இளங்கோவன், வெற்றி செல்வம், மாநில பொருளாளர் ராஜகணபதி, நகர மாவட்ட பொறுப்பாளர் ரத்தினவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்களை செயல்படுத்திய மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

