/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உலக அமைதி தின விழா புதுச்சேரியில் 11ம் தேதி ஏற்பாடு
/
உலக அமைதி தின விழா புதுச்சேரியில் 11ம் தேதி ஏற்பாடு
உலக அமைதி தின விழா புதுச்சேரியில் 11ம் தேதி ஏற்பாடு
உலக அமைதி தின விழா புதுச்சேரியில் 11ம் தேதி ஏற்பாடு
ADDED : நவ 05, 2025 07:28 AM

புதுச்சேரி: புதுச்சேரி சுகன்யா கன் வென்சன் சென்டரில் திருமூர்த்திமலை உலக சமாதான அறக்கட்டளை சார்பில் 'உலக அமைதி தின வி ழா' வரும் 11ம் தேதி நடக்கிறது.
இதுகுறித்து அறக்கட்டளை நிறுவனர் குருமகான் கூறியதாவது:
கடந்த 1918ம் ஆண்டு முதல் உலக போருக்கு பின், போரில் ஈடுபட்ட நாடுகளுக்கிடையே நவம்பர் 11ம் தேதி அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. அதையடுத்து, ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 11ம் தேதி 'உலக அமைதி தினம்' அனுசரிக்கப்படுகிறது.
அதன்படி, இந்த ஆண்டிற்கான 'உலக அமைதி தின விழா' திருமூர்த்திமலை உலக சமாதான அறக்கட்டளை சார்பில், வரும் 11ம் தேதி புதுச்சேரி சுகன்யா கன்வென்சன் சென்டரில் நடக்கிறது.
காலை 10:00 முதல் 12:30 மணி வரை நடக்கும் நிகழ்ச்சியில், கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், திருமுருகன் உட்பட பலர் பங்கேற்கின்றனர். இதில், உலக மக்கள் அனைவரும் ஒரே நேரத்தில், ஒரு நிமிடம் அமைதி காப்பதன் மூலம் நேர்மறையான எண்ண அலைகள் உலகம் முழுதும் பரவி நிரந்தர அமைதிக்கான சூழலை உருவாக்கும்.
அமைதியின் மூலம் பிரபஞ்ச சக்தியுடன் மனம் தொடர்பு கொண்டு தெளிவான சிந்தனையும், புரிதலையும், சரியாக முடிவு எடுக்கும் திறனையும் மேம்படுத்தும்' என்றார்.
ஆச்சார்யா கல்வி நிறுவனங்களின் தலைவர் அரவிந்தன், அறக்கட்டளை பொதுச் செயலாளர் சுந்தரராமன், அறங்காவலர்கள் விநாயகம், சுப்ரமணியம், செங்குட்டுவன், விஸ்வநாதன் ஆகியோர் உடனிருந்தனர். முன்னதாக விழா அழைப்பிதழ் வெளியிடப்பட்டது.

