sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ துப்பாக்கி முனையில் பேச்சுவார்த்தை நடத்துவது பா.ஜ.,கலாசாரம்: காங்., தேசிய செய்தி தொடர்பாளர் தாக்கு

 துப்பாக்கி முனையில் பேச்சுவார்த்தை நடத்துவது பா.ஜ.,கலாசாரம்: காங்., தேசிய செய்தி தொடர்பாளர் தாக்கு

 துப்பாக்கி முனையில் பேச்சுவார்த்தை நடத்துவது பா.ஜ.,கலாசாரம்: காங்., தேசிய செய்தி தொடர்பாளர் தாக்கு


ADDED : பிப் 02, 2026 03:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 02, 2026 03:00 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மீண்டும் காங்., ஆட்சிக்கு வந்ததும் முறைகேடுகளுக்கு துணையாக இருந்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என காங்., பாத யாத்திரையில் பங்கேற்ற தேசிய செய்தி தொடர்பாளர் பவன் கேரா கூறினார்.

அரியாங்குப்பம் பகுதி காங்., கட்சியின் பாதயாத்திரையில் பங்கேற்ற அவர் கூறியதாவது: கடந்த 5 ஆண்டுகளாக என்.ஆர்.காங்.,- பா.ஜ., ஆட்சியில் ஒரு பள்ளியோ, ஒரு மருத்துவப் படுக்கையோ உருவாக்கப்படவில்லை.

ஓர் ஆசிரியர் பதவி, ஒரு மருத்துவர் பதவிக் கூட உருவாக்கவில்லை. மாறாக 400 ரெஸ்டோபார்கள் திறக்கப்பட்டுள்ளன. புதுச்சேரியில் உருவாக்கப்பட்டுள்ள அனைத்து மருத்துவ வசதிகளும் காங்., ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டவை.

அதனால் புதுச்சேரி மக்கள் காங்., ஆட்சிக் காலத்தில்தான் நல்லாட்சி நடந்ததாகக் கூறுகிறார்கள். மேலும், அந்த ஆட்சி திரும்பவும் ஏற்பட வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர்.

புதுச்சேரியில் போலி மருந்து தயாரித்தது என்பது இந்த ஆட்சியின் ஊழலாக மட்டும் இல்லை. இது ஒரு பாவச் செயல். இதற்கு மன்னிப்பு என்பதே கிடையாது.

அதனால்தான் வரும் சட்டசபை தேர்தலில் இந்த ஆட்சியை மாற்ற புதுவை மக்கள் தயாராகிவிட்டனர். சட்டசபை தேர்தலுக்குப் பிறகு காங்., மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சிறந்த நிர்வாகம் மலரும். புதுச்சேரி வளர்ச்சியில் மாற்றம் ஏற்படும்.மேலும், முறைகேடுகளுக்கு துணையாக இருந்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.

மத்தியில் ஆளும் பா.ஜ., அரசுக்கு இணக்கமான அரசு மாநிலங்களில் அமையவில்லையென்றால் நிர்வாக ரீதியாகத் தொல்லைக் கொடுப்பதும், இரட்டை இன்ஜின் ஆட்சி முறை என்பதும் அரசியல் அமைப்புக்கும், மாநில தன்னாட்சிக்கும் விரோதமானது.

கூட்டணி கட்சியுடன் துப்பாக்கி முனையில் பேச்சுவார்த்தை நடத்தும் பா.ஜ.,வின் கலாசாரம் காங்., இல்லை. மாறாக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த ஒரு குழு அமைக்கப்படும். அந்தக் குழு சமூகமாகப் பேசி கூட்டணி கட்சியுடன் முடிவு எடுக்கும். அது விரைவில் தெரியவரும்

இவ்வாறு பவன் கேரா கூறினார்.

அப்போது முன்னாள் முதல்வர் நாராயணசாமி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us