/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
2026ல் பா.ஜ., ஆட்சி அமைத்து வெற்றி விழா கொண்டா ஒத்துழைக்கவேண்டும்; பா.ஜ., புதிய தலைவர் ராமலிங்கம் பேச்சு

ADDED : ஜூலை 01, 2025 02:13 AM
புதுச்சேரி : பா.ஜ., மாநில புதிய தலைவராக பதவியேற்ற ராமலிங்கம் பேசியதாவது:
பிரதமர் மோடி பதவியேற்க வந்த போது, 11வது இடத்தில் இருந்த இந்தியாவை 4வது இடத்திற்கு கொண்டு வந்த மகான். பா.ஜ., கட்சியில் பணியாற்றுவது சாதாரண விஷயம் இல்லை. ஏற்கனவே செல்வகணபதி பாஸ் ஆகிவிட்டார். எனக்கு இப்போது தான் தேர்வு. எங்களுடைய பொறுப்பாளர் உன்னை நம்பி பொறுப்பை ஒப்படைக்கிறேன். 2026ல் ஆட்சியை கொண்டுவரும் பொறுப்பு உனக்கு உள்ளது என கூறியுள்ளார். நிச்சயம் முயற்சி செய்கிறேன் என்றேன். ஆனால் அவர் 100 மதிப்பெண் பெற வேண்டும் என ஆசைப்படுகிறேன் என்றனர்.
எங்களுடைய பொதுச் செயலாளர் எனக்கு 5 கட்டளைகளை வழங்கியுள்ளார். ஒவ்வொரு கட்சி தொண்டனின் வீட்டிற்கு செல்லுங்கள். உனக்கு பொறுப்பு கொடுத்துள்ளது ஏதோ சாதாரணமாக கொடுத்து விடவில்லை. பா.ஜ., வில் யாரையாவது துாக்கி பிடித்து, சீபாரிசு செய்து பதவி வாங்கிவிடலாம் என கற்பனையில் கூட எண்ணக்கூடாது.
எனக்கு முன்னாடி ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் எல்லாம் டெல்லியில் தவம் கிடந்து முயற்சி செய்தனர். ஒருமுறை கூட டெல்லிக்கு சென்று பதவியை நான் கேட்கவில்லை. எங்கெல்லாம் உழைப்பாளர்கள் இருங்கின்றரோ அவர்களை தேடி பொறுப்புகளை கொடுத்து அழகு பார்த்து, அவர்களை வேலைக்கு அமர்த்துவர்.
பா.ஜ.,வில் உறுப்பினராக இருப்பது தவம். பா.ஜ., கட்சி எளிமை, நேர்மையானது. புதுச்சேரியில் 4 ஆயிரம் பதவிகள் நிரப்பப்பட்டன. நீங்கள் எல்லாம் எங்களோடு தோலோடு தோல் கொடுத்து, உழைத்தால் தான் 2026ம் சட்டசபை தேர்தலில் நமது கனவை நாம் நிறைவேற்ற முடியும். அனைத்து தொண்டர்கள் வீடுகளும், தொகுதிகளுக்கும் செல்ல உள்ளேன். அனைவரின் காலிலும் விழப்போகிறேன். 2026ல் பா.ஜ., வை ஆட்சி அமைத்து, இந்த மேடையிலேயே வெற்றி விழா கொண்டாடுவதற்கு நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். என்றார்.