/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு விழாவில் கருப்பு கொடி: கோட்டைவிட்ட உளவுத்துறை
/
அரசு விழாவில் கருப்பு கொடி: கோட்டைவிட்ட உளவுத்துறை
அரசு விழாவில் கருப்பு கொடி: கோட்டைவிட்ட உளவுத்துறை
அரசு விழாவில் கருப்பு கொடி: கோட்டைவிட்ட உளவுத்துறை
ADDED : அக் 28, 2025 06:15 AM
புதுச்சேரி: போலீஸ் துறையின் உளவுத்துறை செயலிழந்து போனதால், அரசு விழாவில் கருப்பு கொடி காட்டும் அவலம் அரங்கேறியுள்ளது.
போலீஸ் துறையில், உளவுத்துறை என்ற பிரிவு உள்ளது. இத்துறையினர் மக்களோடு மக்களாக பழகி, அரசுக்கு எதிரான கருத்தகளை அரசுக்கு முன்கூட்டியே தெரிவித்து, தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வைப்பதே இத்துறையின் பிரதான பணி.
ஆனால், புதுச்சேரி போலீஸ் துறையில் உளவுப்பிரிவு என்ற ஒன்று செயல்படுகிறதா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தனியார் பங்களிப்புடன் இ-பஸ் சேவை துவக்க விழா நேற்று நடந்தது. இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த நேரு எம்.எல்.ஏ., துவக்க விழா அன்று பொதுநல அமைப்புகளுடன் போராட்டம் நடத்தப்படும் என நேற்று முன்தினமே அறிவித்தார். இத்தகவல் சமூக வலைதளங்களிலும் வைரலாகியது.
ஆனாலும், உளவுத்துறை வழக்கம்போல் இந்த விஷயத்தையும் கோட்டை விட்டது. இதனால், போராட்டத்தை தடுக்க முடியாமல் திணறியதோடு, தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும், போலீசாரையும் தாக்கவும் முயற்சி நடந்தது.
அனைத்திற்கும் மேலாக, எவ்வித எதிர்ப்புமின்றி, போராட்டக்குழுவினர் கவர்னர் மற்றும் முதல்வருக்கு விழா வாசலில் கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்திருப்பது, போலீஸ் துறையின் ஒட்டுமொத்த செயலற்ற தன்மையை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.
இதேபோன்று, கம்பன் கலை அரங்கில் நடந்த அரசு விழாவில் இதே நேரு எம்.எல்.ஏ., பூட்டிய கேட்டை ஏறி குதித்து சென்று, போராட்டம் நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.

