/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கவர்னருக்கு கருப்பு கொடி: எம்.எல்.ஏ., மீது வழக்கு பதிவு மூடி மறைக்கும் போலீஸ்

ADDED : நவ 04, 2025 01:42 AM
புதுச்சேரி: கவர்னர் மற்றும் முதல்வருக்கு எதிராக கருப்பு கொடி காட்டிய எம்.எல்.ஏ., மீது பதிவு செய்த வழக்கை, போலீசார் மூடி மறைப்பது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
போக்குவரத்து துறை சார்பில் மின்சார பஸ்கள், தனியார் பங்களிப்புடன் பேட்டரி மினி பஸ்கள் இயக்கும் விழா தாவரவியல் பூங்கா எதிரே உள்ள பணிமனையில் கடந்த 2மோ் தேதி நடந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விழாவில் பங்கேற்க வந்த கவர்னர் மற்றும் முதல்வருக்கு நேரு எம்.எல்.ஏ., தலைமையில் பொதுநல அமைப்பினர் கருப்பு கொடி காட்டியதால், விழாவில் பரபரப்பு நிலவியது.
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக, நேரு எம்.எல்.ஏ., மற்றும் பொதுநல அமைப்பினர் மீது ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால், இந்த வழக்கு விபரத்தை போலீசார் மூடி மறைத்து வருவது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.