ADDED : பிப் 19, 2025 05:46 AM

புதுச்சேரி : மின்துறையில் காலி பணியிடம் நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஐ.டி.ஐ., நல சங்கத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி மின்துறையில் காலியாக உள்ள 176 கட்டுமான உதவியாளர் பதவிகளை நிரப்ப வேண்டும்.
ஒயர்மேனுக்கு ஏ.எல்.ஐ., பதவி உயர்வு, ஏ.எல்.ஐ.,க்கு போர்மேன் பதவி உயர்வு வழங்க வேண்டும். சம்பள முரண்பாடுகள் நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி, மின்துறை ஐ.டி.ஐ., நல சங்கம் சார்பில் கடந்த மாதம் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோரிக்கைகள் நிறைவேற்றாததால், நேற்று முன்தினம், மின்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.அரசு ஊழியர்கள் மத்திய கூட்டமைப்பு பொது செயலாளர் லட்சுமணசுவாமி தலைமை தாங்கினார். சங்க தலைவர் அருள்மொழி, பொதுச்செயலாளர் ரவி, நிர்வாகிகள் செல்வம், பிரபு, அன்பழகன், கார்த்திகேயன் உட்பட பலர் பங்கேற்றனர். .
போராட்டத்தை தொடர்ந்து, மின்துறை தலைவர் சண்முகத்துடன் பேச்சுவார்த்தை நடந்தது.அப்போது, காலி பணியிடங்கள்நிரப்ப ஒரு வாரத்தில் அறிவிப்பு வெளியாகும். பதவி உயர்வு விரைவாக முடித்து கொடுக்கப்படும். ஹெல்பர் சீனியாரிட்டி லிஸ்ட் வெளியிடவும், தொழிலாளர்களுக்கான இறப்பு தொகை ரூ.20 லட்சம் கிடைக்கும் வகையில், வங்கி கணக்கு மாற்றி தரவும்ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதனால், சங்கத்தினர் போராட்டத்தை கைவிட்டனர்.

