/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு கல்லுாரியில் ரத்ததான முகாம்
/
அரசு கல்லுாரியில் ரத்ததான முகாம்
ADDED : செப் 04, 2025 12:45 AM

திருபுவனை: கலிதீர்த்தாள்குப்பம் காமராஜர் அரசு கல்லுாரியில் என்.சி.சி., தரைப்படை பிரிவு சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.
புதுச்சேரி என்.சி.சி., தலைமையக தரைப்படை பிரிவு கமாண்டர் கர்னல் மொஹந்தி உத்தரவின்பேரில், கல்லுாரியின் என்.சி.சி., தரைப்படை பிரிவு மற்றும் கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையின் ரத்த வங்கி இணைந்து நடத்திய முகாம் துவக்க விழாவிற்கு கல்லுாரி முதல்வர் கனகவேல் தலைமை தாங்கினார்.
கல்லுாரி என்.சி.சி., தரைப்படை பிரிவு அலுவலர் லெப்டினன்ட் கதிர்வேல், ஹவில்தார்கள் ஆனந்தன், நவீன்குமார் முன்னிலை வகித்தனர்.
அங்காளன் எம்.எல்.ஏ., முகாமை துவக்கி வைத்துப் பேசினார். டாக்டர் கார்த்திகேயன் தலைமையிலான குழுவினர் மாணவர்கள் தானமாக வழங்கிய ரத்தத்தை சேகரித்தனர்.