ADDED : மார் 18, 2026 04:52 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி, ஜிப்மர் ஓ.பி.சி., ஊழியர்கள் நல சங்கம் சார்பில், 10ம் ஆண்டு ரத்த தான முகாம் நேற்று நடந்தது.
சங்கத்தின் கவுரவத் தலைவர் அர்ச்சுனன், சங்கத்தின் தொடர்பு அதிகாரி ராஜேஷ் நாச்சியப்பா கணேஷ் தலைமை தாங்கினார்.
முகாமில் சங்கத்தினர் மற்றும் ஊழியர்கள் ஜிப்மர் ரத்த வங்கியில் ரத்த தானம் வழங்கினர்.
இதில், சங்கத் தலைவர் வேலு, அமைப்புச் செயலாளர் அண்ணாமலை, பொதுச்செயலாளர் சாந்தி செல்வம், பொருளாளர் செல்வமணி, துணைத் தலைவர்கள் சுதாகர், பெருமாள் ராஜா, உறுப்பினர்கள், அலுவலக நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து ரத்த தானம் செய்தவர்களுக்கு சங்கத்தின் சார்பாக நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.
