/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தாகூர் அரசு கல்லுாரியில் ரத்ததான முகாம்
/
தாகூர் அரசு கல்லுாரியில் ரத்ததான முகாம்
ADDED : செப் 09, 2025 06:36 AM

புதுச்சேரி : தாகூர் அரசு கலை கல்லுாரியில் நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை, செந்நாடாச் சங்கம் மற்றும் ஓய்வு பெற்ற ராணுவ நலச்சங்கம் சார்பில் மாபெரும் ரத்ததான முகாம் நேற்று நடந்தது.
முகாமை கல்லுாரி முதல்வர் கருப்புசாமி துவக்கி வைத்தார். ஜிப்மர் ரத்த வங்கியின் டாக்டர் பிரஷியா தலைமையிலான மருத்துவக் குழுவினர் ரத்தத்தை சேகரித்தனர். இதில், 100க்கும் மேற்பட்ட கல்லுாரி மாணவர்கள் ரத்த தானம் வழங்கினர்.
முகாமிற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் வெங்கடசாமி, சஞ்சய், தேசிய மாணவர் படை தீபக் உச்சம்பள்ளி, செந்நாடாச் சங்க ஒருங்கிணைப்பாளர் ஹெப்சிபா, ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் நலச்சங்க தலைவர் ராகுல்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.