ADDED : மார் 21, 2025 04:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரி ரத்த மாற்று ஆலோசனைக் கழகம், நலவழித்துறை இயக்குனரகம், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் ஒருங்கிணைந்து, தனியார் மற்றும் அரசு சமூக நல ஆலோசகர்களுக்கான ஒரு நாள் விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது.
நலவழித்துறை இயக்குனர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். மருத்துவக் கண்காணிப்பாளர் செவ்வேள், உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி ஷமிமுனிசா, மக்கள் தொடர்பு அதிகாரி ஆத்மநாதன், குறை தீர்ப்பு அதிகாரி ரவி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
ரத்த தான தன்னார்வலர் எண்ணிக்கை அதிகப்படுத்தல், பாதுகாப்பாக ரத்த தானம் கொடுப்பது, ரத்த தான சேவைகளை தொடர்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க தலைமை மருத்துவ அதிகாரி சித்ராதேவி உட் பட டாக்டர்கள் கலந்து கொண்டனர்.