/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாநில விளையாட்டு போட்டியில் புளு ஸ்டார் பள்ளி சாதனை
/
மாநில விளையாட்டு போட்டியில் புளு ஸ்டார் பள்ளி சாதனை
மாநில விளையாட்டு போட்டியில் புளு ஸ்டார் பள்ளி சாதனை
மாநில விளையாட்டு போட்டியில் புளு ஸ்டார் பள்ளி சாதனை
ADDED : டிச 19, 2024 06:20 AM

வில்லியனுார்: பள்ளிக் கல்வித்துறை சார்பில், மாநில அளவிலான விளையாட்டு போட்டியில் சாதனை படைத்த புளு ஸ்டார் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
புதுச்சேரி அரசு பள்ளிக் கல்வித்துறை மற்றும் விளையாட்டுத்துறை சார்பில், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இடையேயான மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் மாகே, ஏனம் மற்றும் புதுச்சேரியில் நடந்தது.
மூன்று இடங்களில் நடந்த கால் பந்து, இறகு பந்து, கோ-கோ, கபடி, பூப் பந்து, யோகா, பளு துாக்குதல் மற்றும் கேரம் ஆகிய போட்டிகளில் புளு ஸ்டார் பள்ளி மாணவர்கள் பங்கேற்று, எட்டு வெள்ளி பதக்கங்கள், ஐந்து வெண்கலப் பதக்கங்களை பெற்று சாதனை படைத்தனர்.
மாணவர்கள் மற்றும் உடற்கல்வி ஒருங்கினைப்பாளர் நளினி, பயிற்சியாளர்கள் பிரசாந்த், பார்த்தசாரதி மற்றும் உதயக்குமார் ஆகியோரை பள்ளி தாளாளர் மெய்வழி ரவிக்குமார், முதல்வர் வரலட்சுமி மற்றும் துணை முதல்வர் சாலை சிவசெல்வம் ஆகியோர் பாராட்டினர்.

