ADDED : செப் 15, 2026 06:02 PM
புதுச்சேரி: தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க., வேட்பாளர் சேதுசெல்வத்திற்கு தீவிர ஓட்டு சேகரிக்கும் பணிக்காக அமைக்கப்பட்ட பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தலைமை அலுவலகத்தில் நடந்தது.
மாநில அமைப்பாளர் சிவா தலைமை தாங்கினார். மாநில துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி, பொருளாளர் செந்தில்குமார், எம்.எல்.ஏ., விக்னேஷ் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தி.மு.க., வேட்பாளர் சேதுசெல்வம் வரவேற்றார். கூட்டத்தில் பூத் கமிட்டி நிர்வாகிகள் அவரவர் ஓட்டுச்சாவடியில் எவ்வாறு ஓட்டு சேகரிப்பில் ஈடுபடுவது, வேட்பாளரின் வெற்றிக்கு எப்படி பிரசாரம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதில், முன்னாள் எம்.எல்.ஏ., மூர்த்தி, தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் லோகையன், அருட்செல்வி, தட்டாஞ்சாவடி தொகுதி பொறுப்பாளர் நித்திஷ், பொதுக்குழு உறுப்பினர்கள் வேலன், அமுதாகுமார், நர்கீஸ், தொகுதி செயலாளர்கள் சக்திவேல், நடராஜன், தியாகராஜன், வடிவேல், ஆறுமுகம், மாணவர் அணி அமைப்பாளர் மணிமாறன், மகளிர் அணி அமைப்பாளர் காயத்ரி, மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் சுமதி, வர்த்தகர் அணி துணைத் தலைவர் குரு, மகளிர் துணைத் தலைவர் பிரியதர்ஷினி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
