sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 20, 2026 ,தை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 ஊசுட்டேரியில் மீண்டும் படகு சவாரி துவங்கியது

/

 ஊசுட்டேரியில் மீண்டும் படகு சவாரி துவங்கியது

 ஊசுட்டேரியில் மீண்டும் படகு சவாரி துவங்கியது

 ஊசுட்டேரியில் மீண்டும் படகு சவாரி துவங்கியது


ADDED : ஜன 19, 2026 04:58 AM

Google News

ADDED : ஜன 19, 2026 04:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: ஆறு மாத இடைவெளிக்குப் பிறகு, ஊசுட்டேரியில் படகு சவாரி மீண்டும் துவங்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி என்றாலே கடற்கரை, பிரெஞ்சு கட்டடங்கள், வரலாற்றுச் சுவடுகள் என நினைவுக்கு வரும்.

ஆனால், அவற்றை எல்லாம் தாண்டி மனதை நெகிழ வைக்கும் இன்னொரு அடையாளம் - இயற்கையின் வரப்பிரசாதமான ஊசுட்டேரி.

புதுச்சேரி-தமிழக எல்லையில் சுமார் 850 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள ஊசுட்டேரி, ஆண்டுதோறும் பறவைகளின் சொர்க்கபுரியாக மாறிவிடுகிறது. நவம்பர் மாதம் தொடங்கி பல்வேறு நாடுகளிலிருந்து வரும் வண்ண வண்ண பறவைகள் இங்கு இனப்பெருக்கத்திற்காக தங்குகின்றன. இதன் காரணமாகவே ஊசுட்டேரி பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மழை நீரால் நிரம்பி, கண்ணுக்கு குளிர்ச்சியூட்டும் பசுமை போர்வை போர்த்தியபடி ஊசுட்டேரி ஓவியம்போல் காட்சியளிக்கிறது.இப்போது, தண்ணீர் ததும்பி நிரம்பிய ஏரியின் மேற்பரப்பில், கும்பல் கும்பலாக நீர்கோழிகள் நீந்தி இரை தேடும் காட்சி பார்ப்பவர்களை மெய்மறக்கச் செய்கிறது. கூட்டினுள் பசியோடு காத்திருக்கும் குஞ்சுகளுக்காக, பெரிய பறவைகள் மூழ்கி மூழ்கி இரை தேடும் அந்த நொடி... இயற்கை எழுதிய ஒரு அழகிய கவிதை போலத் தோன்றுகிறது.

இந்த ரம்யமான சூழலில், கடந்த ஜூன் மாதத்துடன் நிறுத்தப்பட்டிருந்த படகு சவாரி, தற்போது மீண்டும் துவங்கப்பட்டுள்ளதால், ஊசுட்டேரியின் அழகு இரட்டிப்பாகியுள்ளது.

அதிகாலை நேரங்களிலும், மாலை வேளையிலும், சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக வந்து இந்த காட்சிகளை ரசித்து செல்கின்றனர்.பறவைகளுக்கு எந்த வித தொந்தரவும் ஏற்படாத வகையில், அமைதியாக படகில் சென்று ஏரியின் மடியில் இயற்கையை அனுபவிக்கும் அனுபவம், மனதில் நீண்ட நாட்கள் பதிந்து விடுகிறது.

மீண்டும் படகு சவாரி துவங்கியுள்ள ஊசுட்டேரி, சுற்றுலா பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 5 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு கட்டணம் இல்லை. 5 முதல் 10 வயது வரை - ரூ.50 பெரியவர்களுக்கு - ரூ.100 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நகரத்தின் ஓசைகளில் இருந்து தப்பித்து, சிறகடிக்கும் பறவைகளின் இசையோடு, நீர் ததும்பும் அமைதியின் மடியில் இளைப்பாற நினைப்பவர்களுக்கு ஊசுட்டேரி படகு சவாரி வரபிரசாதமாக திகழ்கிறது.






      Dinamalar
      Follow us