ADDED : அக் 27, 2025 11:44 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: மாணவர்களின் ஆராய்ச்சிக்காக, இறந்தவரின் உடல் தானமாக அரசு மருத்துவ கல்லுாரிக்கு வழங்கப்பட்டது.
முதலியார்பேட்டை அடுத்த வாணரபேட்டை பாரதிதாசன் வீதி, தாமரை நகரை சேர்ந்தவர் தவப்பாண்டியன், 63; இவர், பன்னாட்டு மனித உரிமைகள் பேரவையில், இறந்த பின், தனது உடலை மருத்துவம் படிக்கும் மாணவர்களின் ஆராய்ச்சிக்கு வழங்க பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில், தவபாண்டியன் உடல் நலக்குறைவால், கடந்த 25ம் தேதி இறந்தார்.
இவரது குடும்ப உறவினர்களின் ஒப்புதலோடு, பன்னாட்டு மனித உரிமை பேரவை தலைவர் சக்திவேல் முன்னிலையில், கதிர்காமம் அரசு மருத்துவ கல்லுாரிக்கு அவரது உடல் தானமாக வழங்கப்பட்டது.
அப்போது, உடல் தானம் பதிவு ஆலோசகர் கந்தசாமி உடனிருந்தார்.

