/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி கடலில் மாயமான ஆந்திரா மாணவர் உடல் மீட்பு
/
புதுச்சேரி கடலில் மாயமான ஆந்திரா மாணவர் உடல் மீட்பு
புதுச்சேரி கடலில் மாயமான ஆந்திரா மாணவர் உடல் மீட்பு
புதுச்சேரி கடலில் மாயமான ஆந்திரா மாணவர் உடல் மீட்பு
ADDED : டிச 23, 2024 04:20 AM
புதுச்சேரி : புதுச்சேரி கடலில் குளித்தபோது அலையில் சிக்கி மாயமான ஆந்திரா மாநில வாலிபர் உடல் நேற்று கரை ஒதுங்கியது.
ஆந்திரா மாநிலம், கடப்பா பகுதியைச் சேர்ந்தவர் வினித் ரெட்டி, 19; திருச்சி தனியார் பொறியியல் கல்லுாரியில் பி.இ., முதலாம் ஆண்டு மாணவர். கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக தனது சக நண்பர்கள் 5 பேருடன் நேற்று முன்தினம் புதுச்சேரி வந்தனர். 6 பேரும் தலைமை செயலகம் எதிரே கடலில் இறங்கி விளையாடினர்.
அப்போது கடலில் எழுந்த ராட்சத அலையில் சிக்கி வினித்ரெட்டி, சந்தோஷ் இழுத்து செல்லப்பட்டனர். சக நண்பர் மஞ்சு அலையில் சிக்கிய சந்தோசை காப்பாற்றினார். வினித்ரெட்டி கடலுக்குள் மூழ்கி விட்டார். கடலோர காவல்படை மற்றும் தீயணைப்பு துறையினர் நேற்று முன்தினம் இரவு வரை தேடியும் கிடைக்கவில்லை.
நேற்று காலை கடற்கரை சாலை டூப்ளக்ஸ் சிலை அருகே வினித்ரெட்டியின் உடல் கரை ஒதுங்கியது. பெரியக்கடை போலீசார் உடலை கைப்பற்றி கதிர்காமம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை செய்யப்பட்ட உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.