sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 மருந்து தயாரிக்கும் கம்பெனியில் பாய்லர் வெடித்து 10 பேர் காயம் திருபுவனையில் பரபரப்பு

/

 மருந்து தயாரிக்கும் கம்பெனியில் பாய்லர் வெடித்து 10 பேர் காயம் திருபுவனையில் பரபரப்பு

 மருந்து தயாரிக்கும் கம்பெனியில் பாய்லர் வெடித்து 10 பேர் காயம் திருபுவனையில் பரபரப்பு

 மருந்து தயாரிக்கும் கம்பெனியில் பாய்லர் வெடித்து 10 பேர் காயம் திருபுவனையில் பரபரப்பு


ADDED : ஜன 31, 2026 07:16 AM

Google News

ADDED : ஜன 31, 2026 07:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருபுவனை: திருபுவனையில் தனியார் மருந்து தயாரிப்பு கம்பெனியில் நேற்று பாய்லர் வெடித்ததில் 10 பேர் காயம் அடைந்தனர்.

புதுச்சேரி, திருபுவனையில் உள்ள எலக்ட்ரானிக் தொழிற்பேட்டையில் தனியார் மருந்து தயாரிப்பு கம்பெனி இயங்கி வருகிறது. இதில், புதுச்சேரி மற்றும் தமிழகத்தை சேர்ந்த ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

அதன் முதல் தளத்தில் மருந்து தயாரிக்கும் பவுடர்களில் ஈரப்பதத்தை நீக்க 'டிரே டிரையர்' பாய்லர் உள்ளது. இந்த பாய்லரில் அசிட்டோன் மருந்து கலப்பதன் மூலம் ஈரப்பதம் உறிஞ்சப்பட்டு மருந்து தயாரிக்கப்படுகிறது.

இந்நிலையில் நேற்று பகல் 1:15 மணியளவில் பாய்லர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் இரும்பு மற்றும் அலுமினியத்தால் ஆன தளவாடங்கள், கண்ணாடி கதவுகள், பிளாஸ்டிக் மற்றும் மெட்டல் பொருட்களால் உடைந்து தீப்பற்றி எரிந்தன.

அதில், விழுப்பரம் மாவட்டம், வளவனுார் காந்தி நகரை சேர்ந்த மாடசாமி மகள் பிரியங்கா, 23, உள்பட 10 பேர் காயம் அடைந்தனர். அவர்களை, சக ஊழியர்கள் மீட்டு, மருத்துவம னைக்கு அழைத்து சென்றனர்.

அவர்களுக்கு தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தகவலறிந்த திருபுவனை தீயணைப்பு நிலைய அதிகாரி கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். விபத்து குறித்து சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் இன்று 31ம் தேதி ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

பாய்லர் வெடித்த சமயத்தில், அங்கிருந்த ஊழியர்கள் மதிய உணவு சாப்பிட சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.






      Dinamalar
      Follow us