UPDATED : அக் 07, 2026 05:20 AM
ADDED : அக் 07, 2026 01:54 AM
புதுச்சேரி: தட்டாஞ்சாவடி தொகுதி ஓட்டுச் சாவடிகளுக்குள் வெடிகுண்டு இருப்தாக பரவிய வதந்தியால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி, தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் நேற்று ஓட்டுப் பதிவு நடந்தது. இதில், குண்டுபாளையம் பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள ஓட்டுச்சாவடியில் வெடிகுண்டு இருப்பதாக நேற்று தகவல் பரவியது.
இதனை தொடர்ந்து உள்ளூர் போலீசார், துணை ராணுவப்படையினர் சிறப்பு அதிரடி படையினர் விரைந்து சென்று சோதனை நடத்தினர். அதில் வெடிகுண்டு இல்லை என்பதும், தகவல் வதந்தி என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து தேர்தல் அதிகாரி கூறுகையில், அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என, தெரிவித்தார். போலீஸ் அதிகாரி கூறுகையில் இது ஒரு வதந்தி; நாங்கள் எங்கும் சென்று சோதனை செய்யவில்லை என, தெரிவித்தனர்.
