UPDATED : அக் 07, 2026 05:20 AM
ADDED : அக் 07, 2026 01:54 AM
சிதம்பரம்: சிதம்பரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து, திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சிதம்பரம் அருகே உள்ள மகாராஜன் கார்டன் மேட்டுக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன், 55; சிதம்பரம் அரசு மருத்துவமனையில் கண் பரிசோதகராக உள்ளார். இவர், நேற்று முன்தினம் காலை வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் வேலைக்கு சென்றுள்ளார்.
அதையடுத்து, வீட்டில் வேலை பார்க்கும் பெண் தீபா என்பவர் வீட்டிற்கு வந்தபோது, முன்பக்க கேட் திறந்த நிலையில் இருந்து. மேலும், வீட்டின் பின்பக்க கதவுகள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், இதுகுறித்து வேல்முருகனுக்கு தகவல் தெரிவித்தார். அவர் வந்து பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த வெள்ளி விளக்கு, உண்டியலில் இருந்த 7000 ரூபாய் பணம் உள்ளிட்ட பொருட்கள் திருடு போயிருந்தது.
இதுகுறித்து சிதம்பரம் தாலுகா போலீசில் வேல்முருகன் அளித்த புகாரில் வழக்கு பதிந்து, வீட்டை உடைத்து திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றன.
